சிங்கப்பூரில் ஜனாதிபதியாக பதவி வகித்த தமிழன் எஸ்.ஆர். நாதன் காலமானார்..!

Share this post:

sin

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவர் சிங்கப்பூரின் நீண்ட நாள் அதிபராக பதவி வகித்த பெருமை உடையவர்.

92 வயதான அவர் கடந்த ஜூலை 31 ம் தேதி பக்கவாத நோயின் காரணமாக சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி அவர் இன்று இரவு காலமானார்.

அவரது மறைவிற்கு சிங்கப்பூர் பிரதமர் லி சைன் லுாங், அதிபர் டோனி டான் யாம் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

எஸ். ஆர். நாதன் 1999 ல் சிங்கப்பூரின் ஆறாவது அதிபராக பதவி ஏற்றார். 2011 ம் ஆண்டு வரை 12 ஆண்டுகள் அதிபர் பதவி வகித்தார்.

சிங்கப்பூர் தமிழரான அவர் 1924 ஆம் ஆண்டு ஜூலை 3 ம் தேதி பிறந்தார். சிங்கப்பூர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று 1955 ல் மருத்துவ சமூக அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

பின்னர் வெளியுறவுத் துறை செயலர், பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்பிரிவு இயக்குநர், அமெரிக்காவிற்கான சிங்கப்பூர் துாதர் என படிப்படியாக பல முக்கிய பதவிகளில் வகித்து இறுதியில் சிங்கப்பூர் அதிபராக பொறுப்பேற்றார்.

Share This:
Loading...

Related Posts

Loading...