புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானம்

Share this post:

rain

புகையிரதங்கள் மீது கல் வீசுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புகையிரதங்களில் பயணித்துக் கொண்டிருக்கும் நபாகளை இலக்கு வைத்து கல் வீசி எறியும் நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்த 0.38 மில்லிமீற்றா ரக 25 கைத்துப்பாக்கிகள் புகையிரத திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் இந்த கைத்துப்பாக்கிகள் வெலிசறை கடற்படை முகாமிலிருந்து வழங்கப்பட்டதாக புகையிரதப் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் அனுர பிரேமரட்ன தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ரிவோல்வர்களைக் கொண்ட 15 மீற்றர் தொலைவு வரையில் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் மேலும் 25 கைத்துப்பாக்கிகள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.புகையிரத திணைக்களப் பாதுகாப்புப் பிரிவினர் தற்போது பழைய துப்பாக்கி வகை ஒன்றையே பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய ரிவோல்வர்களை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.ஒரு புகையிரதத்திற்கு இரண்டு ஆயுதம் தாங்கிய அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...