கண்கவர் நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது ரியோ ஒலிம்பிக்.. பதக்கங்களைப் வெல்லத் தவறிய இலங்கை – தட்டு தடுமாறி 2 பதக்கங்களை வென்ற இந்தியா..!

Share this post:

rio

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில், ஆகஸ்ட் 3ம் தேதி துவங்கிய 31வது ஒலிம்பிக் போட்டிகள் இலங்கை இந்திய நேரப்படி இன்று அதிகாலை நிறைவடைந்தது.

இந்த ஒலிம்பிக்கில் 207 நாடுகளைச் சேர்ந்த 11,239 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

மரக்கானா மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவு விழா நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2020ம் ஆண்டு ஜப்பானில் உள்ள டோக்கியோ நகரில் நடைபெறுகிறது. எனவே ஒலிம்பிக் ஜோதியை டோக்கியோ ஆளுநர் பெற்றுக்கொண்டார்.

46 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 121 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா முதலிடம் பிடித்தது. கிரேட் பிரிட்டன் 2வது இடமும், சீனா மூன்றாவது இடமும் பிடித்தன. ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என இரண்டே பதக்கங்களை பெற்ற இந்தியா, 67வது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இதேவேளை இலங்கை அணி எந்த பதக்கத்தினையும் வெல்லாது இலங்கை ரசிகர்களை இம்முறையும் ஏமாற்றியுள்ளது…

Share This:
Loading...

Recent Posts

Loading...