திருமணமாகி நான்கே மாதத்தில் பெண் எடுத்த விபரீத முடிவு!! – இலங்கையில் நடந்த சோகம்..!

Share this post:

sui

நேற்று மதியம் அளுத்கமவில் இருந்து காலி நோக்கி பயணித்த தொடரூந்து ஒன்றில் பலபிடிய , வெலிதர பிரதேசத்தில் 28 வயதுடைய பெண்ணொருவர் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதன் போது கடும் காயங்களுக்கு உள்ளான குறித்த பெண் பலபிடிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராபிடிய போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் கைப்பையில் இருந்து கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் , தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான்கு மாதங்களுக்கு முன்னர் குறித்த பெண் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் , அவர் கடந்த சில நாட்களாக மனவருத்தத்துடன் காணப்பட்டதாக அவரின் தாய் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...