இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக அமையுமா வாங்க பார்க்கலாம் – இன்றைய 22.8.16 ராசி பலன்கள்..

Share this post:

rasipalan

மேஷம்
கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் சங்கடங்கள் வரும். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானத்துடன் செயல்படப்பாருங்கள்.

அதிஷ்ட எண்: 9

அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ரிஷபம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள்.

அதிஷ்ட எண்: 8

அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

மிதுனம்
சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.

அதிஷ்ட எண்: 1

அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

கடகம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல் நலம் சீராகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.

அதிஷ்ட எண்: 5

அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

சிம்மம்
இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நண்பர்கள், உறவினர்கள் விஷயத்தில் அத்துமீறி தலையிட வேண்டாம். நியாயம் பேசப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும்.

அதிஷ்ட எண்: 3

அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

கன்னி
பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். இரவு 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

அதிஷ்ட எண்: 7

அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

அதிஷ்ட எண்: 6

அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

விருச்சிகம்
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள்.

அதிஷ்ட எண்: 9

அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

தனுசு
எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள்.

அதிஷ்ட எண்: 4

அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

மகரம்
திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள்.

அதிஷ்ட எண்: 2

அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

கும்பம்
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். அழகு, இளமைக் கூடும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார்.

அதிஷ்ட எண்: 5

அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

மீனம்
இரவு 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும்.

அதிஷ்ட எண்: 3

அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், பிங்க்

Share This:
Loading...

Related Posts

Loading...