வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அமைச்சரின் செயலாளர்!!

Share this post:

TR

தொழில் வாய்ப்பை பெற்று தருவதாக கூறி அமைச்சரின் செயலாளர் ஒருவர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் 20 வயதான யுவதி அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

கதிர்காமம் பிரதேசத்தில் குறித்த நபர் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக யுவதி தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேச எதிர்க்கட்சி அரசியல்வாதியான இந்த நபர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளராகவும் பதவி வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...