A9 வீதி விபத்துக்களும்! போக்குவரத்து பொலிஸாரின் விசாரணைகளும்…

Share this post:

po

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பிரதான A9 வீதியில் குறித்த சில நாட்களாக தொடர்ந்து வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றதாக போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.

போக்குவரத்தை மேற்கொள்ளும் போது சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுமாறும் அவதானமாக வாகனங்களை ஓட்டிச்செல்லுமாறும், தரித்து நிற்கும் வாகனங்களுக்கு சமிக்ஞை ஒளியை தவறாமல் ஒளிரவிடுமாறும் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அதிகாலை A9 வீதியில் தரித்து நின்ற டிப்பர் கனரக வாகனத்துடன் யாழில் இருந்து வவுனியா நோக்கிவந்த டிப்பர்கனரக வாகனம் மோதியதில் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸ்பிரிவு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...