இலங்கை அகதிகளின் பிள்ளைகள் இந்திய பாடசாலையில் இருந்து நீக்கம் – யுத்தம் முடிந்தும் விலகாத ஈழத் தமிழர்களின் சோகம்..!

Share this post:

sr

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகளான 55 மாணவ-மாணவிகளின் பள்ளி தஸ்தாவேஜுகளில் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்த காரணத்தினால் அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சென்னை பிரைட் தொண்டு நிறுவனம் இலங்கையை சேர்ந்த ஞானதீபன், ஞானநேந்திரன், ஞானராஜா இவரது சகோதரர்கள் இணைந்து நடாத்தி வருகின்றனர்.

இவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்துள்ளனர்.

அந்த வீட்டில் தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களின் குழந்தைகள், பெங்களூரில் உள்ள அகதிகளின் குழந்தைகள் இலங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகள் என 55 மாணவர்கள் தங்கி இருந்தனர்

மேலும், அவர்கள் 6 வயது முதல் 20 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியராக காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அச்சிறுப்பாக்கம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு கற்றல் செயற்பாடுகளை செய்து கொண்டு வந்துள்ளனர்.

குறித்த 55 மாணவ-மாணவிகளின் பள்ளி தஸ்தாவேஜுகளில் குடியுரிமைக்கான ஆதாரங்கள் இல்லாமல் இருந்ததை பள்ளி நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.

இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் அந்த 55 மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கியதுடன் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலே அவர்கள் நீக்கப்பட்டதாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்களை இனிமேல் சேர்க்கமாட்டோம் எனவும் அறிவித்துள்ளனர்.

இதே வேளை இதுபற்றி தகவலறிந்த உளவுப்பிரிவு, கியூ பிரிவு பொலிஸார் அச்சிறுப்பாக்கத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றதோடு பிரைட் தொண்டு நிறுவன முகாமையாளர் பேரின்ப நாயகத்திடம் விசாரணைகளை நடத்தி வருகிறது.

பிரைட் தொண்டு நிறுவனம் எந்த அடிப்படையில் இலங்கை அகதிகளின் குழந்தைகளை தங்க வைத்திருந்தது. இதற்கு அரசிடம் முறையான அனுமதி பெற்றிருந்தார்களா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றது.

பிரைட் தொண்டு நிறுவனத்தில் மாணவ-மாணவிகள் பாதுகாப்புக்காக தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த 4 பேர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...