சொர்க்க பூமியாக மாறும் இலங்கை! படையெடுக்கும் வெளிநாட்டவர்கள்…

Share this post:

tu

இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த ஜுலை மாதத்தில் எதிர்பாராதளவு அதிகரிப்பை காட்டியுள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜுலை மாதத்தில் 2 இலட்சத்து 9351 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அது கடந்த வருடம் ஜுலை மாதத்தை ஒப்பிடும் போது நூற்றுக்கு 19.1 வீத அதிகரிப்பாகும்.

அத்துடன் 1960ஆம் ஆண்டில் இருந்து இந்த நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.

இந்ந நிலையில் இந்த மாதம் வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகளின் வருகையே இவை அனைத்திலும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த டிசம்பர் மாதம் 2 இலட்சத்து 6114 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகைத்தந்துள்ள நிலையில், இந்த வருடத்தில் ஜுலை மாத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதனை முறியடித்துள்ளது.

ஜனவரி மாதத்தில் இருந்து ஜுலை மாதம் வரையில் இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகளில் 3 இலட்சத்து 80725 பேர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய பிராந்தியத்தில் இருந்து வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 2 இலட்சத்து 83689 பேர் ஆகும். அதேபோல் சீனா உட்பட கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் இருந்து 2 இலட்சத்து 50274 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக பதிவாகியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...