சரத்குமார் பட நாயகியை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்! – பரபரப்பு வாக்குமூலம்..!!

Share this post:

na

தன்னை படுக்கைக்கு அழைத்த சினிமா தயாரிப்பாளரிடம் தான் பட்ட பாடு பற்றி சினிமா நடிகை டிஸ்கா சோப்ரா கூறியுள்ள விவகாரம் இந்தி சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1993ஆம் ஆண்டும் வெளியான படம் ஐ லவ் இந்தியா. இதில் நடிகர் சரத்குமாருக்கு கதாநாயகியாக நடித்தவர் டிஸ்கா சோப்ரா. அதன் பின் இவர் தமிழில் நடிக்கவில்லை. இந்திக்கு போனார். பெரிய வாய்ப்புகள் இல்லை. அதன்பின் நடிகர் அமீர்கான் இயக்கிய “தாரே ஜமீன் பர்” படத்தில் நடித்தார்.அவர் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர் கூறியதாவது: எனக்கு சரியான வாய்ப்பில்லாத நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்னை அழைத்தார். எனக்கு பட வாய்ப்பும் கொடுத்தார். ஆனால், அவர் படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் படவாய்ப்பு கொடுப்பார் என்று என்னை பயமுறுத்தினார்கள். சரி சமாளிப்போம் என்று முடிவெடுத்து படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அவருடைய மனைவியுடன் நெருங்கி பழகினேன். அப்படி இருந்தால் என்னை அவர் படுக்கைக்கு அழைக்க மாட்டார் என நினைத்தேன். படப்பிடிப்பு வெளிநாட்டில் நடந்தது. எனக்கும், அந்த தயாரிப்பாளருக்கும் அருகருகே அறைகள் ஒதுக்கப்பட்டது. அப்போதே எனக்கு பயம் ஆரம்பித்துவிட்டது. அன்று இரவு என்னை அவர் அறைக்கு அழைத்தார். போகாமல் இருக்க முடியாது என்பதால் சென்றேன். ஆனால், ஹோட்டல் ஊழியர்களிடம் கூறி அவரது அறைக்கு அடிக்கடி கால் செய்யும் படி கூறிவிட்டு சென்று விட்டேன். அவர்களும் நான் கூறியது போல் செய்ய, அவர் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தார். அந்த இடைவெளியில் அவரிடமிருந்து தப்பி விட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...