இலங்கையில் S.L.S இல்லாத குடிநீர் போத்தல்களுக்கு தடை..!

Share this post:

water

எஸ்.எல்.எஸ். சான்றிதழ் இன்றிய குடிநீர் போத்தல்களை பொதியிடல், விநியோகித்தல், எடுத்துச் செல்லுதல், களஞ்சியப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் என்பன அனைத்து நடவடிக்கைகளும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான விதிமுறைகள் கடந்த 2015 ஜுலை மாதம் 11 ஆம் திகதி வெளியான சுற்று நிருபத்தில் காணப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சுற்றுநிருபம் வெளியான தினத்திலிருந்து குறித்த சட்டம் அமுல்படுத்தப்படும். அன்றைய தினத்திலிருந்து இந்த சட்டங்களை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...