அரச வாகனங்களில் தமிழ் மொழியின் அவல நிலை – தமிழ் புறக்கணிக்கப்படுகின்றதா?

Share this post:

po

இலங்கையில் உள்ள பெரும்பாலான அரச திணைக்களங்களில் உள்ள பெயர் பலகையிலும், வாகனங்களிலும் தொடர்ந்தும் தமிழ் மொழியை பிழையாக பிரயோகித்து வருகின்றனர்.

இதை பறைசாற்றும் முகமாக பதுளை பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் சூழல் பாதுகாப்பு பிரிவு என்பதற்கு “துழல் பாதுகாப்பு மரீவு” என்று எழுதப்பட்டுள்ளது.

இப்படியான செயற்பாடுகள் தமிழருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்துவதோடு தமிழரை இழிவுபடுத்துவதாகவும் கருதப்படுகின்றது.

எனவே இது போன்ற தவறுகளை சரி செய்வதுடன் இனி தவறுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ளுவது அரசினதும் அரச திணைக்களங்களினதும் தலையாய கடமையாகும் எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...