ஐரோப்பிய சந்தைகளில் குவிக்கப்படும் இலங்கை மீன்கள்! – மகிழ்ச்சியில் அரசு…!

Share this post:

fish

கடந்த இரண்டு மாதங்களில் 600 தொன் மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதை அடுத்து, இந்த வளர்ச்சி நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கடந்த அரசாங்கம் மீது கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கான கால அவகாசமும் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தன.

எனினும், அப்போதைய மஹிந்த அரசாங்கம் அதனை கண்டுகொள்ளாமையினால், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

ஆனால், சமகால அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒருவருட காலத்திற்குள் அது குறித்து உடனடியாக செயற்பட்டு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, மீன் ஏற்றுமதிக்கான தடையை தளர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதற்கமைவாக கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி இலங்கை மீதான மீன் ஏற்றுமதித் தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியது.

இதனடிப்படையில் வருடத்தின் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட ஏனைய நாடுகளுக்கு 7490 தொன்கள் மீன்களை இலங்கை ஏற்றுமதி செய்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...