மகளின் திருமண நிகழ்வில் தந்தைக்கு நிகழ்ந்த சோகம்..!

Share this post:

ma

பெற்ற மகளின் திருமண நிகழ்வில் தந்தை ஒருவர் உயிரிழந்த சோகமான சம்பவம் ஒன்று குருணாகல் மாவட்டம் பொல்பித்திகம, மடஹபொல பிரதேசத்தில் நேற்று நடந்துள்ளது.

மகளுக்கு மணமேடையில் திருமண சடங்கு நடைபெறுவதை பார்த்து கொண்டிருந்த தந்தை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

பொல்பித்திகம, பன்சிகம மடஹபொல என்ற முகவரியை சேர்ந்த ஜீ.எம். பிரேமச்சந்திர என்ற 64 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கீழே விழுந்த இவர், பொல்பித்திகம மாவட்ட வைத்தியசாலையில் எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சடலம் வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...