தனது மகனுடன் தகராறில் ஈடுபட்டதால் மாணவன் ஒருவனை சராமாரியாகத் தாக்கிய அதிபர்.. தாக்குதலுக்குள்ளான மாணவன் வைத்தியசாலையில்..

Share this post:

athi

கண்டி – தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தரம் 07 இல் கல்வி கற்கும் தல்ஹா எனும் மாணவன் அதிபரின் தாக்குதலுக்கு உள்ளாகி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதே வகுப்பில் கற்கும் தனது மகனுடன் தகராறில் ஈடுபட்டதால் பாடசாலையின் அதிபராகிய எம்.என்.எம். சித்தீக் குறித்த மாணவனை கடந்த 16 ஆம் திகதி பாடசாலையின் அனைத்து மாணவர்களின் முன்னிலையில் (2 ம் தவணை மாணவர் தேர்ச்சி அட்டை வழங்கும்) மேடையில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளார்.

அவரது தாக்குதலை தாங்க முடியாத மாணவன் ஓடியதையும் பொருட்படுத்தாத அதிபர் மாணவனை விரட்டியவண்ணம் மாணவனின் தலையிலும் முதுகிலும் இரு ஆசிரியர்கள் வந்து தடுக்கும் வரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

கடுமையான தாக்குதலுக்குள்ளான மாணவனுக்கு மாலை நேரத்தில் மூக்கிலிருந்து இரத்தமும் பின்னர் வாந்தியும் வந்ததால் உடனடியாக கண்டி போதனா வைத்தியசாலையில் 10ஆம் இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த அதிபர் பேராதனைப் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...