இப்படியும் ஒரு வைத்தியசாலையா : ஒரே அறைக்குள் நிர்வாண நிலையில் ஆண்கள், பெண்களை அடைத்து வைத்து கொடுமை…

Share this post:

ni

அரசு மனநல வைத்தியசாலையில் ஒரே அறைக்குள் ஆண்-பெண் மனநோயாளிகளை நிர்வாண நிலையில் அடைத்து வைத்திருந்தது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநில அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் திகதி மேற்கு வங்காள மாநில தலைநகரான கல்கத்தாவில் உள்ள பெர்கம்பூர் மனநல வைத்தியசாலைக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அஞ்சலி என்பவர் சென்றுள்ளார்.

அங்கு ஒரு அழுக்கடைந்த அறையில் மனநலம் குன்றிய சில ஆண் மற்றும் பெண் மனநோயாளிகள் நிர்வாணமாக இருந்ததை பார்த்து அஞ்சலி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த தகவல்கள் ஊடகங்களில் செய்தியாக வெளியானது. ஊடக செய்தியை மையமாக கொண்டுமனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்கு வங்காள அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பெர்கம்பூர் மனநல வைத்தியசாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆண்-பெண் நோயாளிகள் மாதக்கணக்கில் குளிக்காமலும், மழிக்கப்படாமலும் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருந்ததற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.

அங்குள்ள கழிவறைகள் யாரும் பயன்படுத்த முடியாதவாறு மிகவும் மோசமாக இருந்தது. படுக்கையில் மூட்டைப்பூச்சிகள் ஊர்ந்து சென்றன. சலவை வசதி இல்லை. முடிதிருத்துபவர் இல்லை, குளியறைகள் மோசமான நிலையில் உள்ளன.

இங்கு நோயாளிகள் தடுமாறி விழுந்து காயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ள தேசிய மனித உரிமை ஆணையம், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்க அரசாங்கத்தின் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் திகதி நிலவரப்படி, இந்த மனநல வைத்தியசாலையில் சுமார் 430 ஆண் மற்றும் பெண் நோயாளிகள் தங்கியுள்ளதாக தெரியவருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...