வருகிறது புதிய சட்டம் – உங்க தலைக்கவசத்தில் இது இருக்கா..? இல்லையென்றால் அபராதம் கட்ட ரெடியாகுங்க..

Share this post:

sss

இலங்கையின் தர நிர்ணய எஸ்.எல்.எஸ் தரச்சான்றிதல் அற்ற மோட்டார் தலைக்கவசங்களை விற்பனை செய்வோருக்கு எதிராக எதிர்வரும் செம்டம்பர் முதலாம் திகதியிலிருந்து சுற்றிவளைப்புகள் மெற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

தலைக்கவசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளின் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். 517 தர முத்திரை கட்டாயப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அதிகம் பதிவாகியுள்ளதுடன், அதற்கு காரணம் தரமற்ற தவைலக்கவசம் என தெரியவந்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் காலங்களில் SLS சான்றிதழ் அற்ற தலைக்கவசம் அணிவதும் குற்றமாக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது …

Share This:
Loading...

Related Posts

Loading...