தனது 3 குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற தந்தை எதற்காக ?

Share this post:

hanthao

நெல்லையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையை சேர்ந்த ராஜசேகர்(29) என்பவருக்கு மேகலா(26) என்ற மனைவியும், முத்துசெல்வி(8), காவியா(6), ஆர்த்தி(3) என்ற மூன்று பெண்குழந்தைகளும் உள்ளன.

ராஜசேகருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா அடித்தல் போன்ற பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரோ அதை கண்டு கொள்ளவே இல்லை.

இந்நிலையில் நேற்றிரவு ராஜசேகர் அதிக அளவு மது அருந்தி விட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அவரை கழுத்து நெரித்து கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளார். இதனால் உயிருக்கு பயந்த அவரது மனைவி அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மனைவி தன்னை தனியாக விட்டு விட்டு சென்ற காரணத்தினால் ஆத்திரமடைந்த அவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளையும் வலுக்கட்டாயமாக எழுப்பி தலைக்கு அடிக்கும் சாயத்தை குளிர்பானத்தில் கலந்து கொடுத்துள்ளார்.

இதனால் அக்குழந்தைகள் சம்பவ இடத்திலே பரிதாபமாக துடி துடித்து இறந்தனர்.

காலையில் போதை தெளிந்த ராஜசேகர் குழந்தைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, தன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். அருகில் இருந்த மக்கள் அவரது அலறல் சத்தம் கேட்டு உள்ளே வந்து பார்த்த போது மூன்று குழந்தைகள் இறந்து கிடப்பதை பார்த்து அவரது மனைவிக்கு தகவல் அனுப்பினர். அதன் பின் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் என் கணவரின் போதை பழக்கமே தன் மூன்று குழந்தைகளின் உயிரை பறித்து விட்டது என அவரது தாயார் அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடிப்பழக்கம் ஆபத்தானது நீங்களும் தொடர்பவராயின் இன்றே விட்டு விடுங்கள்..

Share This:
Loading...

Related Posts

Loading...