ஏ 9 வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் விபத்து – வெளியேறும் பெற்றோலை எடுத்து செல்லும் மக்கள்..!

Share this post:

pet

யாழ்ப்பாணம் கண்டியை இணைக்கும் ஏ9 வீதியின் பூ ஓயா பாலத்திற்கு அருகில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த எரிபொருள் கொள்கலன் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான கொள்கலனில் இருந்து வெளியேறிய பெற்றோலை பிரதேச மக்கள் எடுத்து சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...