கூட்டமைப்பின் புதிய எம்.பியாக பாராளுமன்றம் நுழைந்தார் அருந்தவபாலன்??

Share this post:

arun

அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் தோல்வியை தழுவிய க.அருந்தவபாலன் தேசிய பட்டியல் மூலமான நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பாடசாலை அதிபரான அருந்தவபாலனின் மணி விழா நிகழ்வில் இன்று (17) கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்திருந்தனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் விருப்பு வாக்கு மோசடி இடம் பெற்றதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து தென்மராட்சியில் தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் கடும் சீற்றமடைந்திருந்ததுடன் மார்டின் வீதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இதையடுத்து அருந்தவபாலனிற்கு தேசிய பட்டியலில் இரண்டரை வருடங்கள் வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டிருந்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...