நமாலின் அடுத்த கள்ளக் காதலி வாழ்க்கை அந்தரத்தில்!!!

Share this post:

li

பணச் சலவை விவகாரம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் நாமல் ராஜபக்க்ஷவின் கவர்ஸ் கோப்ரேஷன், என்.ஆர். கன்சல்டன் நிறுவன பணிப்பாளரும் விமானப் பணிப் பெண்ணுமான நித்திய சேனாதி சமரநாயக்க நேற்றுக் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து பிரதான சந்தேக நபரான ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையிலேயே, தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவரான குறித்த விமானப் பணிப்பெண் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு நேற்று காலை சென்ற நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் 2 ஆம் இலக்க விசாரணை அறையின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மொஹம்மட் சாஜித் தலைமையிலான குழுவினரால் நித்திய சேனாதி சமரநாயக்க, பணி நிமித்தம் டில்லி நோக்கி செல்ல இருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவர் கொழும்பு மேலதிக நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் நேற்று ஆஜர் செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

நாமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமானதெ கூறப்படும் ஹெலோ கோப் நிறுவனத்தின் 100 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்த விதம் தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் போது நாமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமான என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்ரேஷன் ஆகிய நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகளுக்கு உதவி ஒத்தாசை புரிந்தார் எனும் குற்றச்சாட்டில் குறித்த விமானப் பணிப்பெண் நித்தியா கைது செய்யப்பட்டார்.

இவர் என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்ரேஷன் ஆகிய இரு நிறுவனங்களினதும் பணிப்பாளராகக் கடமையாற்றியவர் என நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று நீதிமன்றுக்கு அறிவித்தது.

நேற்று முன்தினம் நாமலும் அவருக்கு கறுப்புப் பண சுத்திகரிப்புக்கு உதவியதாக கூறப்படும் சுதர்ஷன பண்டார கனேகொடவும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

‘ஊழல் ஒழிப்பு குரல் ‘ அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க கடந்த 2015.07.28 ஆம் திகதி நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கு அமைவாக நேற்று முன்தினம் ஹலோ கோப்ஸ் விவகாரம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராகுமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய நாமல் ராஜபக்க்ஷவும் சுதர்ஷன பண்டார கனேகொடவும் நேற்று முன்தினம் ஆஜராகினர். இதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மேலும் இரு சந்தேக நபர்களான விமானப் பணிப் பெண்ணான நித்தியா சேனாதி சமரநாயக்க, மேலும் ஒரு பெண்ணான சுஜானி போகொல்லாகம ஆகியோர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகவில்லை. சுஜானி போகொல்லாகம கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வீட்டிலிருந்து பணிக்கு சென்ற விமானப் பணிப் பெண்ணான நித்தியா நேற்று கட்டுநாயக்கவில் வைத்து கைதானார்.

இந்நிலையில் கைதான சந்தேக நபரை நீதிமன்றில் நேற்று பொலிஸார் ஆஜர் செய்த போது அவர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் நீதிமன்றில் தோன்றினார்.

நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மொஹமட் சாஜித் விசாரணையாளர்கள் சார்பில் ஆஜரானார்.

நிதிக் குற்றப் புலனய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மொஹம்மட் சாஜித் பின்வருமாறு நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தார்:–
நாமல் ராஜபக்க்ஷ ஹலோகோப்ஸ் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக சட்ட விரோதமாக உழைத்ததாக கூறப்படும் தொகையானது அவருக்கு சொந்தமான இரு நிறுவனங்களை விற்பனை செய்யப்பட்டு பெறப்பட்டது.

அந்த நிறுவனங்கள் ஊடாகவே கறுப்புப் பண சுத்திகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் குறித்த இரு நிறுவனங்கள் தொடர்பில் தேடிய போது அவை நாமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமான என்.ஆர். கன்சல்டன் மற்றும் கவர்ஸ் கோப்ரேஷன் என தெரியவந்தது.

இந்நிறுவனங்கள் அனைத்தினதும் பங்குகள் நாமல் ராஜபக்க்ஷவுக்கு சொந்தமானவை. இந்த இரண்டு நிறுவனங்களும் தமது கறுப்புப் பணத்தை ரொஹான் ஹிரியாகொல்ல என்பவர் தலைமை தங்கும் பொஸ்டன் எனும் நிறுவனத்தின் ஊடாக சுத்திகரித்துள்ளனர்.

இது தொடர்பில் இன்வொய்ஸ் பத்திரங்களையும் வங்கிக் கணக்குகளையும் மையப்படுத்திய விசாரணைகளில் உறுதியானது.

இதன்படி என்.ஆர். கன்சல்டன் நிறுவனம் 15 மில்லியன் ரூபாவையும் கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனம் 30 மில்லியன் ரூபாவையும் பொஸ்டன் நிறுவனத்தில் இட்டு பின்னர் மீள தமது கணக்குகளுக்குள் அவற்றை உள்ளீர்த்துள்ளன.

என்.ஆர். கன்சல்டனின், கவர்ஷ் கோப்ரேஷனின் பணிப்பாளராக நித்தியா சேனாதி சமரநாயக்க எனும் இந்த சந்தேக நபர் செயற்பட்டுள்ளார்.

என்.ஆர். கன்சல்டன் குறித்து 25 இன்வொய்ஸ் பத்திரங்களும் கவர்ஸ் கோப்ரேஷன் தொடர்பில் 14 இன்வொய்ஸ்களும் ஆராயப்பட்டுள்ளதுடன் அவை மன்றுக்குக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இவையனைத்தும் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமையவே இடம் பெற்றுள்ளமை விசாரணையில் உறுதியானது என்றார்.

இதன்போது நீதிமன்றில் கருத்துக்களை முன்வைத்த சந்தேக நபரின் சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தமது சேவை பெறுநர் பெயரளவு பணிப்பாளராகவே இருந்ததாகவும் அவருக்கு குறித்த இரு நிறுவனங்கள் ஊடாகவும் எவ்வித கொடுப்பனவுகளும் கூட கிடைக்கப் பெறவில்லை எனவே அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டார்.

இதன்போது இரு தரப்பு விடயங்களையும் ஆராய்ந்த நீதிவான் லங்கா ஜயரத்ன, சந்தேக நபர் குறித்த குற்றச் சாட்டுடன் சில தொடர்புகளைக் கொண்டுள்ளமை தெளிவாவதால் விசாரணை நிறைவடையவில்லை என்பதை மையப்படுத்தி சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share This:
Loading...

Related Posts

Loading...