யாழில் பிரபல தாதா வாளால் வெட்டியதில் குடும்பஸ்தர் பரிதாபமாகப் பலி!

Share this post:

death

முன்பகை காரணமாக யாழில் உள்ள பிரபல தாதா என அழைக்கப்பட்ட சன்னா வெட்டியதில்குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார்.

சங்குவேலி வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் பிரணவன் (வயது 35) என்ற குடும்பஸ்தரேபலியாகியுள்ளார்.

கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சன்னா என்று அழைக்கப்படும் பிரபல தாதா தனக்கும்குறித்த குடும்பஸ்தருக்கும் இடையில் இருந்த முன்பகையின் காரணமாக நேற்று புதன்கிழமை இரவுவீடு புகுந்து வெட்டியுள்ளார்.

உறவினர்களினால் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சன்னா யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும்பொலிஸ் மீதான வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர், குறித்த நபரை பொலிஸார்தேடுதல் நடாத்திய போதும், அவர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் புகுந்து குடும்பஸ்தரை வெட்டியுள்ளார்.

ஆனால், குறித்த சன்னா கிளிநொச்சி மாவட்டத்தில் தலைமறைவாகி இருக்கின்றார் எனபொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றும் பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கானநடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்…

Share This:
Loading...

Related Posts

Loading...