மாவை சேனாதிராஜாவின் உண்மையான மறுபக்கம் இதுதான் தமிழர்களே !(வீடியோ இணைப்பு )

Share this post:

maavai

சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் நேற்று முன்தினம் (16.08.2016) நண்பகல் 1.00 மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் மாவை சேனாதிராயாவும் சாரதி சசியும் வாகனத்தில் சென்ற போது முன்னால் வந்த பெண்ணை வாகனத்தால் மோதித்தள்ளினர் .

இதனால் படுகாயம் அடைந்த அந்த ஏழைப்பெண் செய்வதறியாது பயத்திலும் அதிர்ச்சியிலும் விழித்த போது மாவையும் அவரது சாரதியும் தம் வீரத்தை அந்த பெண்ணிடம் காட்டி வெருட்டினர் .

உன்னில் தான் பிழை என்றும் உனக்கு எந்த இழப்பீடும் தர முடியாதென்றும் உன்னால் முடிந்ததை நீசெய்யலாம் என்றும் உரத்த தொனியில் அந்த அபலைப் பெண்ணிடம் கத்தினர் .ஆனால் தம்மில் பிழை இல்லை என்று கூறிய அவர்கள் போலீசை நாடவும் இல்லையாம் .

ஆனால் அவர்களின் பேச்சும் வெருட்டலும் அங்கு குவிந்த இளைஞர்களிடத்தில் கடும் கோவத்தை உண்டு பண்ணியது .இறுதியில் இளைஞர்கள் தலையிட்டு மாவையுடன் கடும் போக்கில் பேசி அந்த அபலைப்பெண்ணுக்கு இழப்பீடு வாங்கிக்கொடுத்ததாக அங்கிருந்து கிடைத்த செய்தியில் அறிய முடிகிறது .

தன்னால் உயிராபத்து நேர இருந்த ஏழைப்பெண்ணுக்கே மாவை அய்யா தண்ணி காட்டிட முட்பட்டார் என்றால் தமிழ் மக்களுக்கு உரிமைகளை பெற்றுத்தருவதாகவும் உணர்ச்சி பொங்க மேடைகளில் பேசுவதும் அரசியலுக்காக மட்டுமா?

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கே உதவாத இவர் போரினால் விதவைகளாக்கப்பட்டவர்களுக்கு உதவுவார் என இனியும் நீங்கள் நம்புகிறீர்களா ?

என அங்கிருந்த மக்களும் இளைஞர்களும் தமக்குள்ள தாம் ஏராளமான வினாக்களை வினாவிக்கொண்டனராம்….

Share This:
Loading...

Recent Posts

Loading...