மூன்றாவதும் பெண் குழந்தை கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தை!

Share this post:

pen

தமிழ்நாட்டில் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அமிர்த மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் தாமோதரன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு அனுப்பிரியா (11), இந்துமதி (8) ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் அம்பிகாவுக்கு கடந்த 2 மாதத்துக்கு முன்பு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. அதற்கு ஜோதிலட்சுமி என்று பெயர் வைத்தனர்.

ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் இருக்கும் போது மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததால் அம்பிகாவிடம், தாமோதரன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

மேலும் பெண் குழந்தை ஜோதி லட்சுமியை ஆசிரமத்தில் விட்டு விடலாம் என்று தாமோதரன் கூறி உள்ளார். இதனை அம்பிகா ஏற்க மறுத்து கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் வீட்டில் அனைவரும் இருந்தனர். அப்போது திடீரென 3-வதாக பிறந்த பெண் குழந்தை ஜோதிலட்சுமியை தாமோதரன் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். இதனை பார்த்து அம்பிகா கூச்சலிட்டு கதறி துடித்தார்.

தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் டில்லி பாபு தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் விரைந்து வந்து குழந்தை ஜோதி லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய தாமோதரனை தேடி வருகிறார்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...