பாடசாலை மாணவியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்து இளைஞர்கள் வெறிச்செயல்…!

Share this post:

Untitled-1-890x395

பள்ளியை விட்டு வீடு திரும்பிய பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரத்திரத்திற்கு உட்படுத்திய இளைஞர்களின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் ஹரியானவின் கைதல் மாவட்டம் கையராக் கிராமத்தில் உள்ள பள்ளியில் நேற்று சுதந்திரதின விழா நடைபெற்றது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் சுதந்திர தின விழாவை முடித்துவிட்டு வீடு திரும்பினார்.

அவர் வீடு திரும்பும் வழியில் மோகன் மற்றும் சரப் என்ற இளைஞர்கள் மாணவியை கத்தி முனையில் வழிமறித்து கடத்தி சென்று டிக் கிராமத்தில் உள்ள மோகன் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் ஒருவர் வீட்டின் வெளியே நிற்பதும், மற்றோருவர் வீட்டின் உள்ளே சென்று மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளனர்.

இதனிடையே மாணவி தொடர்ந்து கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் மோகன் மற்றும் சரப் இருவரையும் கைது செய்து, குழந்தை பாதுகாப்பு சட்டம் மற்றும் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறியுள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தில் ஐந்துபேர் கொண்ட கும்பல் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...