கள்ளக்காதலியுடன் ஊரை விட்டு செல்ல முயன்ற கணவனை கண்மூடித்தனமாக வெட்டிக் கொலை செய்த மனைவி!

Share this post:

kilw

தமிழகத்தில் தூத்துக்குடியில் கள்ளக்காதலியுடன் ஊரை விட்டு செல்ல முயன்ற கணவரை அரிவாளால் வெட்டி கொலை செய்த மனைவியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்தவர் அக்பர்(50). இவருக்கு பாத்திமுத்து(45) என்ற மனைவியும், பூஜா(12) என்ற மனநலம் பாதித்த ஒரு குழந்தையும் உள்ளது. அக்பர் அப்பகுதியில் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

அக்கடையின் கணக்கு வழக்குகளை கவனித்து கொள்வதற்காக பாத்திமா(35) என்ற பெண்ணை பணிக்கு அமர்த்தியுள்ளார். ஒரு கட்டத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த நட்பு கள்ளத்தொடர்பாக மாறியது.

இதை அறிந்த அக்பர் மனைவி அவர்கள் இருவரையும் பல முறை கண்டித்துள்ளார். ஆனால் அவர்களோ இவரின் பேச்சை கேட்காமல் வெளியில் சுதந்திரமாக சுற்றி வந்துள்ளனர். பல முறை உல்லாசமாகவும் இருந்துள்ளனர்.

இந்நிலையில் அக்பர் நேற்று முன்தினம் அதிக அளவு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதை அறியாத அவரது மனைவி கள்ளத்தொடர்பு விவகாரம் குறித்து பேசியுள்ளார். ஆனால் அவரோ அவளை திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவி, இவர் கள்ளக்காதலியுடன் ஊரை விட்டு சென்றால் தனக்கும் தன் மகளுக்கும் பெரிய அவமானம் ஏற்படும், வெளியில் தலை காட்ட முடியாது என கருதி தன் வீட்டில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி படு கொலை செய்துள்ளார்.

இச்சம்பவத்தை அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில், அக்பர் மனைவி தான் அவரை கொலை செய்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது என தெரிவித்தனர்.

மேலும் மனைவியே தன் கணவனை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...