வலுக்கும் மைத்திரி – மஹிந்த அதிகாரப் போர்..!

Share this post:

mai

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் கட்சி தொடர்பிலான அதிகாரப் போர் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வகித்து வருகின்றார்.

எனினும், கூட்டு எதிர்க்கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் முனைப்புக்களில் தொடர்ச்சியாக மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஓர் கட்டமாக உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்களைக் கொண்டு, கட்சித் தலைமையை விமர்சனம் செய்யும் ஊடக சந்திப்புக்கள் நடத்தப்பட்டிருந்தன.

முன்னாள் மாநகரசபை, நகரசபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களின் முக்கியஸ்தர்களை கொண்டு இந்த கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சில யுக்திகளை பின்பற்றி கட்சியின் அதிகாரத்தை தக்க வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

கட்சியின் தலைமத்துவத்தையும் கட்சியையும் விமர்சனம் செய்யும் தரப்பினருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் ஓர் கட்டமாக இன்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை வகித்து வரும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுடன் இணைந்து கடமையாற்ற இணை தொகுதி அமைப்பாளர்களை ஜனாதிபதி நியமிக்கத் தீர்மானித்துள்ளார்.

சில முக்கியாமான தேர்தல் தொகுதிகளில் இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணை தொகுதி அமைப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சில தொகுதிகளில் மாவட்ட தொகுதி அமைப்பாளர் பதவியும் வழங்கப்பட உள்ளது.

இன்றைய தினம் முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த நியமனங்களை வழங்க உள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...