மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி கடத்தல் – பின்னணி என்ன..?

Share this post:

eastwe

மட்டக்களப்பில் பல்கலைக்கழக மாணவி கட்டத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் தம்பலவத்தைப் பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் இனந்தெரியாதவர்களால் வேன் ஒன்றில் நேற்று கடத்திச் செல்லப்பட்டார்.

கடத்திச் செல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தினர் பொலிஸாருக்கு வழங்கிய அவசர தகவலை அடுத்து வெல்லாவெளி பிரதான வீதியில் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார், வேனை நிறுத்த முற்பட்டனர்.

இதன்போது அவர்களின் சமிக்ஞையை மீறி தப்பிச்சென்ற மூவரை கொக்கட்டிச்சோலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்கள் மூவரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் கடத்தப்பட்ட மாணவியை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...