கல்யாணம் செய்து கொள்ள கெஞ்சிய காதலி.. உறவுக்குப் பின் கதையை முடித்த காதலன்…..

Share this post:

ko

தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில் ஒரு இளம் பெண் நிர்வாண நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக் கோட்டையில்கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். அவரை அவரது காதலனே கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ள அப்பெண் வலியுறுத்தியதால் ஆத்திரமடைந்து காதலன் கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஷகீலா (பெயர் மாற்றப்பட்டது). 19 வயதான இவர் டுட்டோரியல் கல்லூரியில் பிளஸ்டூ படித்து வந்தார். கடந்த 18ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் போனதால் புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தாயார் உடன் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென ஷகீலா மாயமானார்.

காதலனுடன் ஓட்டம்
இதையடுத்து போலீஸில் புகார் கொடுத்தார் ஷகீலாவின் தாயார். போலீஸார் நடத்திய விசாரணையில் புதுவையைச் சேர்ந்த விஜய் என்ற வாலிபருடன் ஷகீலா ஓடிப் போயிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விஜய்யை போலீஸார் தேடி வந்தனர். அவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது ஷகீலாவை அவர் கொலை செய்து விட்டதாக தெரிய வந்தது.

செஞ்சிக் கோட்டையில்
செஞ்சிக் கோட்டைக்கு ஷகீலாவை கூட்டிக் கொண்டு போயுள்ளார் விஜய். அங்கு வைத்து தன்னைக் கல்யாணம் செய்து கொள்ளுமாறு ஷகீலா வற்புறுத்தியுள்ளார். அதற்கு விஜய், முதலில் இருவரும் சந்தோஷமாக இருப்போம். பின்னர் அதுகுறித்து பேசுவோம் என்று கூறியுள்ளார்.

கோட்டையில் உல்லாசம்
இதைத் தொடர்ந்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் ஷகீலாவின் உடையைக் கொண்டு அவரது கை கால்களைக் கட்டியுள்ளார் விஜய். பின்னர் கொலை செய்து விட்டு தப்பிச் சென்று விட்டார்.

பாறை இடுக்கில் போட்டு விட்டு
ஷகீலாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்த விஜய், பின்னர் பெரிய கல்லை எடுத்து அவரது முகத்தில் போட்டு முகம் அடையாளம் தெரியாத வகையில் சிதைத்துள்ளார். பிறகு உடலை பாறை இடுக்குகளுக்குள் போட்டு விட்டுத் தப்பியுள்ளார்.

திருட்டு வழக்கில் சிக்கியவர்
விஜய் மீது புதுவையில் ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளதாம். இந்த நிலையில் அவர் தற்போது காதலியைக் கொன்ற வழக்கில் சிக்கியுள்ளார். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...