செல்பி மோகத்தால் தமிழ் மாணவனுக்கு நேர்ந்த சோகம்…!

Share this post:

makkal

கோவையில் பள்ளி மாணவன் ஒருவர் கிணற்றின் அருகே நின்று செல்பி எடுக்க முற்பட்டபோது தவறி கிணற்றுக்குள் விழுந்து உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கோவையில் உள்ள பீளமேட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஷ்(17). இவர் மற்றும் இவரது நண்பர்கள் சிலர் பள்ளியில் சுதந்திர தின விழாவை முடித்து விட்டு அங்குள்ள ஜி.வி.ரெசிடென்சி சென்றுள்ளனர்.

ஹரீஷின் நண்பர்கள் அங்குள்ள 120 அடி கிணற்றின் அருகே நின்று செல்பி எடுத்துள்ளனர். அதன் பின்னர் கிணற்றின் படிக்கட்டு அருகே சென்று ஹரீஷ் செல்பி எடுக்க முற்பட்ட போது தவறி கிணற்றின் உள்ளே விழுந்துள்ளார்.

கிணற்றில் கட்டை, முட்புதர்கள், மற்றும் 70 அடிக்கு கீழ் தான் தண்ணீர் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் அடிபட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடியும் ஹரீஷ் உடலை மீட்க முடியவில்லை. மேலும் தீயணைப்பு படையினர் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு செல்போன் மற்றும் பைக் போன்றவற்றை வாங்கி கொடுப்பதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன என பெற்றோர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...