காதலனுடன் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

Share this post:

girl

பண்டாரவளை – இராவணா எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பிரயாணி ஒருவர் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இராவணா எல்ல நீர்வீழ்ச்சியின் அபாயகரமான மலைப்பகுதியை நோக்கி ஏறும் சந்தர்ப்பத்திலேயே குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், தனது காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 19 வயதுடைய ‘மரீனா க்ரூஸ்’ எனும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த யுவதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் குறித்து எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...