கபாலியை வெளியிட்ட ஜாஸ் கையில் விக்ரமின் ‘இருமுகன்’!

Share this post:

iru

தொடங்கிவிட்ட’கபாலி புயல்’ ஒருவழியாக ஓய்வு பெற, மற்ற பெரிய நடிகர்களின் படங்கள் தலைக்காட்ட து. கபாலியை அடுத்து தமிழில் வெளியாகும் பெரிய பட்ஜெட் படம் ‘இருமுகன்’.

விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள இருமுகன், ‘செப்டம்பர் 1 ஆம் தேதி’ ரிலீஸ் என அதிகாரப்பூர்வ செய்தி இன்று வெளியானது.

ரிலீஸுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், இருமுகன் சென்னை வெளியீட்டு உரிமத்தை ஜாஸ் சினிமாஸ் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

கபாலி படத்தைக் கைப்பற்றி பெரும் லாபம் சம்பாதித்த ஜாஸ் சினிமாஸ், தொடர்ந்து பெரிய பட்ஜெட் படங்களை கைப்பற்றுவதில் பெரிய ஆச்சிரியம் இல்லை. இந்நிலை தொடர்ந்தால், பெரியப்படங்களை தொடர்ந்து விநியோகித்து வரும் மற்ற நிறுவனங்களுக்கு பெரும் நெருக்கடி உண்டாகும்..

Share This:
Loading...

Related Posts

Loading...