குத்தகைக்கு விடப்படும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானங்களின் இலட்சினைகள் நீக்கம்!

Share this post:

air

இலங்கை விமானசேவைக்கு சொந்தமான 4 விமானங்களை பாகிஸ்தானிற்கு குத்தகைக்கு விடுவதற்கு முன்னர் அதன் இலட்சினைகளை அகற்ற உள்ளதாக இரிதா லங்கா (Irida Lanka) தெரிவித்துள்ளது.

குறித்த விமானங்களுக்கு பாகிஸ்தானின் இலட்சினையுடன் வர்ணம் பூச உள்ளதாகவும் இந்த விமானங்கள் லண்டன் மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையில் சேவையாற்றும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அமைச்சர் ஹபீர் காசிம் இலங்கையின் சில விமானங்களை பாகிஸ்தானுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...