குருமாற்றம் இலங்கைக்கு எப்படி? மைத்திரி – ரணிலின் நிலை என்ன? சிறைக்கு செல்வாரா மஹிந்த?! ஜோதிடர் பரபரப்பு தகவல்…

Share this post:

ja

குரு மாற்றம் காரணமாக இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் எவ்வாறான மாற்றங்கள் நிகழும் என பிரபல ஜோதிடர் சுஜித் நிஷாந்த யோகி ஆருடம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த போதும், 2020ஆம் ஆண்டு வரை எவ்வித தடையும் இன்றி நடத்திச் செல்லப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஏற்பட்ட குரு மாற்றம் தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஜோதிடர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜோதிடரின் ஆருடத்திலிருந்து முக்கிய விடயங்களாவன,

1. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நல்லாட்சி அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரை எந்த தடையும் இன்றி நடத்தி செல்லப்படும்.

02. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் போராட்டம் தீவிரம் அடையும். கட்சிக்குள் நெருக்கடி அதிகரிக்கும். புதிய கட்சி ஒன்று உருவாகும். அவர் கடந்த காலங்களை விடவும் முன்னோக்கி செல்வதற்கு இடம் உண்டு.

எனினும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதியின் உடல் நலம் குறித்து விசேட அவதானத்தை செலுத்த வேண்டும்.

03. சில பிரிவுகள் மற்றும் சமகால அரசாங்கத்திற்குள் மோதல்கள் ஏற்படும்.

04. பிரபல அரசியல் கதாபாத்திரங்கள் சிறை செல்ல நேரிடும்.

05. கல்வி மற்றும் சிவில் பாதுகாப்பு பிரிவுகளுக்கு இடையில் சிக்கல் நிலைமை ஏற்படும்.

06. 2020 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் இடைக்கிடை காலநிலையில் பாதிப்பு ஏற்படும். காற்று அதிகரிப்பது பிரதானமாகும். மண் சரிவு மற்றும் தீயினால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரிக்கும். அத்துடன் வாகன விபத்துக்களும் அதிகரிக்கும்.

07. அடுத்த வருட இடைப்பட்ட காலப்பகுதியில் வறட்சியான காலநிலை காணப்படும்.

08. 2020ஆம் ஆண்டின் பின்னர் நாட்டின் தலைமைத்துவத்திற்கு சிறப்பான அதிக இளம் கதாபாத்திரங்கள் உருவாகும்.

09. இனவாத குழுக்கள் மீண்டும் நல்லாட்சிக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் அவதானம் ஒன்று காணப்படுவதாக ஜோதிடர் தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...