“என்னை விட்டு போய்விடு இல்லையெனில் உன்னைக் கொன்றுவிடுவேன்” காதலிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த காதலன் கைது…

Share this post:

fi

காதலியிடம் இருந்து விலகிக்கொள்ள காதலிக்கு செல்போன் மூலம் கொலை அச்சுறுத்தல் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காதலனை பிலியந்தல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில், காதலனுக்கு உதவியதாக கூறப்படும் பெண் அழகுக்கலை நிபுணர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காதலனை விட்டு பிரிந்தால் 50 லட்சம் தருவதாகவும் அவ்வாறு செய்யாவிட்டால் கொலை செய்ய போவதாகவும், செல்போன் மூலம் கொலை அச்சுறுத்தல் எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மூன்று பேரையும் தனித்தனியாக அழைத்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். முன்னாள் காதலி என்ற பெயரில் எஸ்.எம்.எஸ் அனுப்ப, குறித்த காதலன், பெண் அழகுக்கலை நிபுணருக்கு 5 ஆயிரம் ரூபா கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காதலியின் பெயரில் வாங்கிய சிம் அட்டையை பயன்படுத்தி இந்த எஸ்.எம்.எஸ் அனுப்பபட்டுள்ளது. காதலனை பொலிஸார் பொலிஸ் சிறைக்கூண்டிலில் அடைத்த போது, அவரை விடுவிக்குமாறு கோரி காதலி அழுதுள்ளார்.

சந்தேக நபரான காதலன் ஏற்கனவே திருமணம் செய்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...