வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வந்த மனைவியை வைத்தியசாலையினுள் புகுந்து சரமாரியாகத் தாக்கிய கணவன் – யாழில் சம்பவம்..!

Share this post:

 

யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த பெண் ஒருவர் மீது அவரது கணவன் விடுதிக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டமையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தனது பிள்ளை ஒருவருக்கு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அவரை அனுமதித்த மேற்படி தாயார் அப்பிள்ளையுடன் வைத்தியசாலையில் தங்கி நின்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலைக்கு வந்த அப்பெண்ணின் கணவர் திடீர் எனப் பாய்ந்து மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் மனைவி மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த போது அவர் அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பினரால் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் அறிந்து வைத்தியசாலைக்குச் சென்ற பருத்தித்துறைப் பொலிஸார் அந்நபரைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மணற்காடு, குடத்தனையைச் சேர்ந்த 25 வயதுடைய நபர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...