விழுந்து விழுந்து சிரிக்க ரெடியாகுங்க: பஞ்சதந்திரம் 2 வருதாம்!

Share this post:

pan

பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கக்கூடும் என்று இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

2002ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாஸன், சிம்ரன், ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஊர்வசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பஞ்சதந்திரம் ஹிட்டானது. படத்தை பார்த்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தனர்.

இந்நிலையில் பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்து ரவிக்குமார் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

பஞ்சதந்திரம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் ஐடியா உள்ளது. இது குறித்து கமல் ஹாஸனிடம் ஒருவரியில் கதை சொல்லியுள்ளேன். சேட்டை செய்யும் கணவர்களை 5 பெண்கள் பழிவாங்குவது தான் கதை என்றார்.

பல படங்களின் இரண்டாம் பாகம் வரும்போது பஞ்சதந்திரத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாகத் தான் இருக்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...