விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் அதிரடி சாதனை – 45 நாட்களில் 9000 கோடி

Share this post:

mo

நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவின் நடவடிக்கையினால் கடந்த 45 நாட்களுக்குள் 9000 கோடி ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பிரகாரம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க விஷேட முற்றுகை பிரிவை ஸ்தாபித்தார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ஒத்துழைப்பும் கிடைப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொகேய்ன் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 7000 கோடியும் , சட்ட விரோத வாகன மற்றும் தொலைபேசி கொள்வனவின் போது 2000 கோடியும் அரசின் வருமானமாக ஈட்டிக் கொடுக்க இந்த விஷேட சுற்றிவளைப்பு பிரிவு செயற்பட்டுள்ளது.

கடந்த 45 நாட்களாக தொடர்ந்தும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுப்பட்ட நிதியமைச்சின் விஷேட சுற்றிவளைப்பு பிரிவு எதிர்வரும் நாட்களிலும் நாட்டிற்கு பலன்தரக் கூடியதும் கடத்தல்களை தடுப்பதற்கும் செயற்படுவார்கள் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...