காதலிக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொடுப்பதற்காக திருட்டில் ஈடுபட்ட காதலன் கைது!

Share this post:

rob

காலி வந்துரம்ப மற்றும் அம்பலாங்கொட பிரதேசத்தில் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் 18 லட்சத்திற்கும் அதிகமான மின் உபகரணங்கள் மற்றும் தங்க நகைகளை திருடிய இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

18 மற்றும் 21 வயதான இளைஞர்களே, வந்துரம்ப பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை அந்த சந்தேக நபர்களில் ஒருவர் தனது காதலிக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதற்காகவே தான் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரண்டு பேரும், எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...