நாகபாம்புடன் செல்ஃபி எடுத்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Share this post:

snacker

நாகபாம்புடன் செல்ஃபி எடுத்ததால் இந்தியாவின் குஜராத் மாநில இளைஞர் ஒருவருக்கு ரூ.25,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குஜராத் மாநிலம் வதோதரா பகுதியைச் சேர்ந்தவர் யாகேஷ் பரோட். இவர், தனது முகநூல் பக்கத்தில் போத்தலில் அடைக்கபப்ட்ட நாகபாம்பு ஒன்றுடன் எடுக்கப்பட்ட செல்ஃபியை ‘ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும்’ என்ற தலைப்புடன் பதிவிட்டார்.

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய இந்த செல்ஃபி, விலங்குகள் நல ஆர்வலர்கள் மூலம் வனத்துறை அலுவலர்களுக்கு புகாராக சென்றது.

இதையடுத்து யாகேஷிடம் விசாரணை நடத்திய வதோதரா பகுதி வனத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து நாகபாம்பினை மீட்டதுடன், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ள பாம்பினை விற்க முயன்ற குற்றத்துக்காக ரூ.25,000 அபராதமும் விதித்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...