பிறந்த மாதத்தை வைத்து எந்நோயால் அவஸ்தைப்படுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?வாங்க பார்க்கலாம்… ஆமாம் நீங்க எந்த மாதம்..!

Share this post:

10-1433934185-6-september

கொலம்பியா பல்கலைகழகத்தைச் சேர்ந்த நிக்கோலஸ் டடோனிட்டி என்னும் விஞ்ஞானி, மக்கள் பிறந்த மாதத்திற்கும், அவர்கள் அவஸ்தைப்படும் நோய்க்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா என ஆராய்ந்ததில், சம்பந்தம் இருப்பது தெரிய வந்தது.

அதிலும் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து, 14 வருடங்களாக கொலம்பியா மருத்துவ மையத்தில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் பட்டிலைக் கொண்டு ஆராயப்பட்டது. ஒரே மாதத்தில் பிறந்தவர்களின் நோய்கள் ஒன்றோடொன்று தொடர்புடையதாக தெரிய வந்தது.

இங்கு அப்படி நிக்கோலஸ் டடோனிட்டி மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவில் எந்த மாதத்தில் பிறந்தவர்கள், எந்த வகையான நோயால் கஷ்டப்படுவார்கள் என்று கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பட்டியலானது 1.7 மில்லியன் நோயாளிகளின் பிறந்த மாதம் மற்றும் நோய்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது.

ஜனவரி
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஹைப்பர் டென்சன் என்னும் உயர் இரத்த அழுத்தத்தினால் அவஸ்தைப்படுவதாக கூறுகிறார்.

பிப்ரவரி
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயான விரைவான மற்றும் ஒழுங்கற்ற இதய துடிப்பால் கஷ்டப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.

மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்தவர்களின் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தேங்கி தடித்து, அதனால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

ஏப்ரல்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்களின், இதயத் தசைகளுக்கு இரத்த ஓட்டம் குறைந்து, அதனால் கடுமையான நெஞ்சு வலியை சந்திக்கக்கூடும் என்று கண்டுபிடித்துள்ளார்.

மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட்
இந்த மாதங்களில் பிறந்தவர்கள் சற்று வலிமையானவராகவும், அவ்வப்போது சிறு சிறு உடல் கோளாறுகளை சந்திக்கக்கூடும் என்றும் கூறுகிறார்.

செப்டம்பர்
செம்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ஆஸ்துமா என்னும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடித்துள்ளார்.

அக்டோபர்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் கவனக்குறைவு அதியியக்கக் கோளாறு (ADHD) என்னும் நடத்தைக் கோளாறால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறுகிறார்.

நவம்பர்
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் வைரல் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளார்.

டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் கடுமையான மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...