நாய் துரத்தினா கூட இவ்வளவு வேகமா ஓட முடியாதேடா என்னடா நடக்குது இங்க…!

Share this post:

அலற விடுகிறார் அல்லரி நரேஷ் இந்த வீடியோவில்… இந்திய சினிமாக்களின் “அழகியல்” அம்சங்களில் இதுவும் ஒன்று!

ரொம்ப தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஜீப்பை ஓட்டமாக ஓடி துரத்திப் பிடித்து நிறுத்துகிறார் நரேஷ். இதுதான் “சீன்”. இதை எப்படிப் படமாக்கியுள்ளார்கள் பாருங்கள்.. !

ஓடுகிறார் ஓடுகிறார்.. ரோட்டில் இளநீர் குடித்துக் கொண்டிருப்பவரின் “விக்” பறக்க பறக்க ஓடுகிறார்… ஸ்பீட் லிமிட் போர்டு கீழே விழுந்து “சாகும்” அளவுக்கு ஓடுகிறார்.. வழியெல்லாம் கார், ஆட்டோ, லாரிகளை ஓரம் கட்டி ஜகா வாங்க வைத்து ஓடுகிறார்.. கடைசியில் போய் ஜீப் முன்பு நிற்கிறார்.. இதையெல்லாம் பார்த்து “சூப்பர்மேனே” ஷாக்காகிப் போகிறார்!!

பழைய வீடியோதான்.. ஆனாலும் பல ஆயிரம் வருஷங்களுக்குப் பிறகும் கூட உங்களது எலும்புக் கூடுகளை சிரிக்க வைக்கும் “கெத்து” இதில் இருக்குங்க! முடியலை.. பாஸ்!!

Share This:
Loading...

Recent Posts

Loading...