ரியோ ஒலிம்பிக்கில் இதுவரை “மகிழ்ச்சி” தராத தமிழர்கள் – மீதமுள்ளவர்கள் சாதிப்பார்களா..?

Share this post:

taaaa

ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற தமிழர்களுக்கு இதுவரை எந்த ஒரு பதக்கமும் கிடைக்காமல் போனது ஏமாற்றத்தைத் தருகிறது… ஒலிம்பிக் வரலாற்றிலேயே 100க்கும் அதிகமான இந்தியர்கள் முதல் முறையாக தற்போதுதான் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்தியர்கள் பங்கேற்கின்றனர்.

இவர்களில் 7 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். பளுதூக்கும் வீரர் சதீஷ் சிவலிங்கம், டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், தடகளம் கணபதி, ஆரோக்கிய ராஜீவ் என மொத்தம் 7 பேர்…

இவர்கள் அல்லாமல் ஈழத் தமிழரான துளசி தருமலிங்கம், கத்தார் நாட்டுக்காக குத்துச் சண்டை போட்டியில் பங்கேற்றார். இதில் நேற்று ஒரே நாளில் 2 தமிழர்கள் தோல்வியைத் தழுவியது ஏமாற்றத்தைத் தந்தது.

ஆண்கள் 77 கிலோ பளுத்தூக்கும் போட்டியில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் 4 ஆம் இடம் பிடித்து தோல்வியடைந்தார். இதேபோல் குத்துச்சண்டையில் மங்கோலிய வீரரிடம் கத்தார் அணிக்காக களமிறங்கிய ஈழத் தமிழர் துளசி தருமலிங்கமும் தோல்வியைத் தழுவினார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...