மட்டக்களப்பில் மணிக்கூடு கோபுரத்தில் நடக்கும் அதிசயம் – மக்கள் பெரும் அதிருப்தி..!(Photos)

Share this post:

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான மணிக்கூட்டு கோபுரமானது ஜனாதிபதி மற்றும் முக்கிய பிரமுகர்கள் எவராவது மட்டக்களப்பிற்கு வந்தால் மட்டுமே இயங்குவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மணிக்கூட்டு கோபுரத்தை அண்மித்த பகுதியில் பிரதேச செயலகம் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகம், மாநகரசபை ,பேருந்து நிலையம் என இன்னும் பல அரச திணைக்களங்கள் அமைந்துள்ளன .

குறித்த மணிக்கூண்டு கோபுரத்திலுள்ள மணிக்கூடு வேலை செய்யாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட எவரும் இதுவரை அவதானிக்க வில்லையாவென கேள்வியெழுப்பும் பொதுமக்கள், அதனை திருத்தியமைக்க மாநகர சபைக்கு நேரம் கிடைக்கவில்லையா எனவும் மாநகர சபையில் ஆட்கள் பற்றாக்குறையா எனவும் கேள்வியெழுப்புகின்றனர்.

எவ்வாறிருப்பினும் குறித்த மணிக்கூண்டு கோபுரத்திலுள்ள மணிக்கூட்டை திருத்தியமைத்து பராமரிக்க வேண்டுமென சம்பந்தப்பட்டோரிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

baatt

batti

Share This:
Loading...

Related Posts

Loading...