மட்டக்களப்பை மூன்றாம் இடத்திற்கு தள்ளிய யாழ்ப்பாணம் எதில் தெரியுமா..?

Share this post:

batti jaff

முதலாம் இடத்தில் இருந்த மட்டக்களப்பை மூன்றாம் இடத்திற்கு தள்ளி முதலாம் இடத்திற்கு யாழ்ப்பாணம் வந்துள்ளது. இதனால் மட்டக்களப்பு குடிமக்கள் கொதித்தெழுந்துள்ளனர். யாழ்ப்பாணிகளை முறியடித்து தாம் முன்னுக்கு வருவோம் என்றும் அவர்கள் சபதம் எடுத்துள்ளனர்.

மதுபாவனையில் மட்டக்களப்பை முன்றாம் இடத்திற்கு தள்ளி யாழ்ப்பாணம் முதலிடத்திற்கு வந்ததால் மட்டக்களப்பு குடிமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

மதுபானப் பாவனையில் முதலாவது இடத்திலிருந்த மட்டக்களப்பு மாவட்டம், தற்போது மூன்றாமிடத்துக்கு சென்றுள்ளது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா தெரிவித்துள்ளார்.

சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் கூட்டம், காத்தான்குடிப் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று இடம்பெற்ற போது மட்டக்களப்பு குடிமக்களுக்கு அதிர்ச்சியூட்டும் தகவலை நீதவான் கணேசராசா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் பேசிய நீதிபதி கணேசராசா இன்னுமொரு மாவட்டத்தில் அதிகமான குடிப்பழக்கம் காணப்படுவதாலேயே மட்டக்களப்பு மாவட்டம் மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

குடிபழக்கத்தில் இன்று யாழ்ப்பாணம் முதலாம் இடத்திற்கு வந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...