நாக்கை அறுத்து கடவுளுக்கு காணிக்கை செலுத்திய 19-வயது ’கல்லூரி மாணவி’ அதிர்ச்சி சம்பவம்!!

Share this post:

naa

இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலத்தில் வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்று கல்லூரி மாணவி ஆர்த்தி நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் ரீவாவில் இச்சம்பவம் நடைபெற்று உள்ளது. நாக்கை அறுத்துக் கொண்ட டி.ஆர்.எஸ். கல்லூரி மாணவி ஆர்த்தி, சம்பவம் நடந்ததற்கு முந்தைய நாள் கனவில் வேண்டியது அனைத்தும் கிடைக்க கடவுள் நாக்கை கேட்டதாக கூறிஉள்ளார்.

மாணவின் சகோதரர் சச்சின் பேசுகையில், ”கனவு குறித்து ஆர்த்தி என்னிடம் பேசினாள், கோவிலுக்கு சென்று நாக்கை காணிக்கை செலுத்த உள்ளதாகவும் கூறினார். இது எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை.

ஆனால் அவள் அதனை மிகவும் முக்கியமானதாக எடுத்துக் கொண்டு உள்ளாள். அவள் விளையாடுகிறாள் என்றுதான் நினைத்தேன்.

படிக்காதவர்கள் மற்றும் மூடநம்பிக்கையில் மூழ்கி உள்ளவர்கள் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என்றுதான் நான் கேள்வி பட்டு உள்ளேன், ஆனால் என்னுடன் பிறந்த சகோதரி இப்படி மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பார் என்று நான் நினைக்கவில்லை,” என்று கூறிஉள்ளார்.

மாணவி ஆர்த்தி கனவு கண்ட மறுநாளே கோவிலுக்கு சென்று தனது நாக்கை அறுத்து உள்ளார்.

பின்னர் மயக்கமடைந்த குறித்த மாணவி 5 மணித்தியாலங்களின் பின் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...