வீடொன்றின் சமயலறையில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு…

Share this post:

dead

தெதிகம – கலப்பிட்டிகம, திவுல்தெனிய பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து ஆண், பெண் இருவரினது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு கிடைத்த தகவலுக்கமைய இந்த சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

42 வயதான ஆணின் சடலம் அந்த வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், பெண்ணின் சடலம் அறைக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

35 வயதான குறித்த பெண் எவ்வாறு மரணமடைந்தார் என்பது பற்றி இதுவரை தெரிய வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...