காதலர்களே… காதலியுங்கள்… ஆபாச படம் மட்டும் பகிராதீங்க… எச்சரிக்கும் ஆய்வு…!

Share this post:

lo

காதலில் எல்லை அவசியம் காதலர்களே… காதலர்கள் ஆபாசமான தகவல்களைப் பகிர்ந்துகொள்வது அவர்களிடையே வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளனர் ஆய்வாளர்கள்.

மனைவியாகவே இருந்தாலும் விவாகரத்து ஆன பின்னர் அந்தரங்கமாக எடுத்த புகைப்படத்தை இணையத்தில் போட்டு அசிங்கப்படுத்தும் வக்ரம் பிடித்தவர்கள் வாழும் காலம் இது. எனவே காதலன்தானே என்று பெண்கள் ஆபாசமாக செல்ஃபி எடுத்து அனுப் வேண்டாம் என்றும் எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

நார்வே நாட்டில் இது தொடர்பாக 14 முதல் 17 வயதுக்கு உட்பட்ட 1000 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளனர்.

காதலர்கள் ஆபாச படம்

நார்வேயில் 1000 பேரில் 549 பேர் காதலிக்கின்றர். அவர்களில் மூன்றில் ஒருவர் தனது காதலன் அல்லது காதலியுடன் ஆபாசப் படங்கள் மற்றும் மெசேஜ்களை பகிர்ந்துகொள்கின்றனர் என்று தெரியவந்திருக்கிறது.

மனரீதியான துன்புறுத்தல்
காதலர்களுக்கு இடையே ஆபாசப் படங்களைப் பகிர்ந்துகொள்வதால் அவர்கள் ஒருவரை மற்றொருவர் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்துகிறார்கள் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

காயப்படுத்தும் காதலர்கள்
கட்டாயப்படுத்த முத்தமிடுவது முதல் உடலுறவுக்கு வற்புறுத்துவது வரை வன்முறைக்கு ஆளாகிறார்கள் அல்லது ஒருவர் மற்றவரின் மனதைக் காயப்படுத்தும் படி நடந்துகொள்கிறார்கள் என்று அந்த ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது.

பாலியல் வன்முறை
பாலியல் ரீதியான வன்முறை 5ல் 3 பேருக்கு நிகழ்ந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் ஆபாச வார்த்தைகள், படங்களை பார்த்த பின்னரே இத்தகைய பாதிப்பிற்கு ஆளாவதாக தெரிவித்துள்ளனர். 40 சதவிகிதம் பேர் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை ஸ்கான்டிநேவியன் பொது சுகாதார பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்தியாவிற்கும் பொருந்தும்
இந்த சர்வே எடுக்கப்பட்டது என்னவோ நார்வேதான் என்றாலும், இந்தியாவிற்கும் அதிகம் பொருந்தும். சில தினங்களுக்கு முன்னர் கூட கம்யூட்டர் கற்றுத்தரும் ஆசிரியரை காதலிக்கும் ப்ளஸ் 2 மாணவி ஒருவர் தன்னுடைய ஆபாச படத்தை அனுப்பியுள்ளார். பின்னர் பயந்து போய் அதை அழித்து விடுமாறு கூறியும் அதை கேட்காத அந்த மிருகம் அந்த படத்தை தனது நண்பர்களிடமும் பகிர்ந்துள்ளது.

எச்சரிக்கை அலாரம்

இதை தெரிந்த அந்த அப்பாவி மாணவி, அசிங்கத்திற்கும் அவமானத்திற்கும் பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது. எனவே இளசுகளே காதலிக்கும் போது அஜால் குஜால் பேச்சுக்கள்… அது மாதிரி படங்களை பகிர்ந்து கொள்வது ஆபத்தில்தான் முடியும் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...