2 மகள்களை கொன்றுவிட்டு தாமும் விஷம் குடித்த தம்பதி…!! நடந்தது என்ன…?

Share this post:

kols

தனியார் விடுதியில் 2 மகள்களை கொன்று கணவன், மனைவி விஷம் குடித்தனர். இதில் மனைவி இறந்து விட்டார். கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.தமிழ் நாட்டின் நாமக்கல் அருகே உள்ள வடவத்தூர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (35). இவரது மனைவி கவுசல்யா (32). இவர்களது மகள்கள் ஜனனி (14) மற்றும் இனியா (9). கடந்த 7ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர்.

தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய இவர்கள், கொடைக்கானலில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர்.இன்று அதிகாலை 2 மணி அளவில் சுப்பிரமணியும், கவுசல்யாவும் தங்களது மகள்கள் ஜனனி, இனியா ஆகியோருக்கு விஷம் கொடுத்துள்ளனர். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். பின்னர் கணவன், மனைவியும் விஷம் குடித்துள்ளனர். இதில், கவுசல்யா இறந்தார்.

சுப்பிரமணி மயங்கிய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி படுக்கையில் கிடந்துள்ளார். இன்று காலை விடுதி ஊழியர்கள், சுப்பிரமணி தங்கியிருந்த அறையின் கதவு திறந்து கிடந்ததை பார்த்து சந்தேகமடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது ஜனனி, இனியா மற்றும் கவுசல்யா இறந்து கிடந்தது தெரிந்தது. சுப்பிரமணி உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகிகள், கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக விடுதிக்கு சென்றனர். சுப்பிரமணியை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாய், மகள்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லை காரணமாக தற்கொலை முடிவை சுப்பிரமணி குடும்பத்தினர் எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். வடவத்தூரில் உள்ள இவர்களது உறவினர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் வந்த பின்னரே, இவர்களது தற்கொலைக்கு முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...