திருமணம் செய்ய மறுத்த காதலி… விரக்தியில் அதை வெட்டிய காதலன்…!

Share this post:

ve

காதல் விவகாரத்தில் தோல்வியடைந்ததால், காதலர் ‘அந்த உறுப்பை’ தானே வெட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதல் தோல்வியால் தாடி வளர்ப்பது, தற்கொலை செய்து கொள்வது போன்ற சம்பவங்கள் குறித்து கேள்விபட்டிருப்போம். ஆனால், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் இளைஞர் தனது ‘அந்த’ உறுப்பை வெட்டி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள சுந்தர்நகர் பகுதியில் இந்த சம்பம் நிகழ்ந்துள்ளது. பெயிண்டிங் தொழில் செய்து வரும் அந்த நபர், இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணும் அந்த நபரை காதலித்துள்ளதாக தெரிகிறது.ஆனால், திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் ஒரு கண்டிஷனை காதலி போட்டுள்ளார்.

சொந்தமாக வீடு வாங்கினால் தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தனது காதலரிடம் கூறியுள்ளாராம். இதையடுத்து, தனது காதலியை திருமணம் செய்து குடும்பம் நடத்துவதற்காக அந்த நபர், தனது பெற்றோர் அனுமதியுடன் புதிய வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளார்.

ஆனால், வாடகை வீட்டில் வாழ்வதற்கு சம்மதம் இல்லை என கூறி அந்த பெண் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த இளைஞர் தனது ‘அந்த’ உறுப்பை தானே வெட்டிக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளாராம்.

அவரது குடும்பத்தினர் வந்து பார்த்த போது அந்த நபர் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். இதனையடுத்து, அவரை மீட்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்த இளைஞருக்கு ஏற்கனெவே திருமணம் ஆன நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர்களுக்கு விவாகரத்து ஆனதாம். இந்நிலையில், அந்த நபர் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...